Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (03.01.2026) | 7 PM Headlines | Thanthi TV

Update: 2026-01-03 14:05 GMT
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறந்தாங்கி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது...
  • உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்...
  • விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் டிரைலர் வெளியானது... "திரும்பி போகும் ஐடியாவே இல்லை, I Am Coming" என டிரைலரில் விஜய் பேசும் வசனத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர்...
  • TAPS ஓய்வூதிய திட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது,. தங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி இருப்பதால் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை ரத்து செய்கிறோம் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
  • 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா... புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், 5 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பொங்கல் விழாவிலும் பங்கேற்க உள்ளார்..
Tags:    

மேலும் செய்திகள்