காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (01.09.2025) ThanthiTV

Update: 2025-09-01 06:32 GMT

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கூட்டு தீர்மானம் நிறைவேற்றம்... பாகிஸ்தான் முன்னிலையிலேயே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன...

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 140 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.... தடயங்களை சேகரித்த போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்...

கேரளாவில் அமீபிக் மூளை காய்ச்சல் பாதிப்பால் ஒரே நாளில் 3 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர்.. நோய் தடுப்பு நடவடிக்கையில் கேரளா சுகாதாரத் துறை தீவிரம்..

தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா பகுதியில் 4 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்தார்... சிறுவன் மரணம் உள்ளூர் மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது

சென்னையில் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்... ஒரு வாரத்திற்கு 60 ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது...

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கொழுக்கட்டை செய்து தராத விரக்தியில், சிறுமி தற்கொலை செய்து கொண்டார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி மரக்காணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

ஈரோடு மாவட்டம் பவானியில் பிறந்து 7 மாதமேமான குழந்தையை விற்க முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்... கர்நாடகாவில் இருந்து 2.70 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை வாங்கி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது...

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஓட்டுநரின் கவன குறைவால் சாலை ஓரம் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.... விபத்தில் காயம் அடைந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்...

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது... 1 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது...

சென்னையில் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்... ஒரு வாரத்திற்கு 60 ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்