நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் கடுமையான குளிர் நிலவுகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றிய பகுதிகளில் தொடர்ந்து இரண்டு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. கூடலூரை சுற்றியுள்ள கூடலூர் நகரப்பகுதி, தேவர்சோலை, நாடு காணி, சேரங்கோடு, முதுமலை நடுவட்டம் போன்ற பகுதிகளில் காலை முதல் கடுமையாக மழை பெய்து வருகிறது.
தொடரும் கன மழையால் பந்தலூர் நகரில் பெருக்கெடுத்தும் ஓடும் தண்ணீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கடுமையான குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது