நீல நிற நண்டுகளின் உற்பத்தியை அதிகரிக்க இளைஞர்கள் முயற்சி

Update: 2025-09-17 02:49 GMT

அரிய வகை நீல நிற நண்டு இனங்களின் உற்பத்தியை அதிகரிக்க முயலும், மீனவ சமுதாய இளைஞர்களின் செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோட்டைப்பட்டினத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடலுக்குள் நண்டு வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலில் சென்று அரிய வகை நீல நிற சினை நண்டுகளை எடுத்து வந்து, அவற்றை கடல்சார் வல்லுநர்கள் அறிவுரைப்படி வளர்த்து, இனப்பெருக்கம் செய்தவுடன், அதனை கடலுக்குள் விடும் பணியினை செய்து வருகின்றனர். மீன்வளத்துறை அதிகாரிகளின் உதவியோடு இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்