ஓசூர்–கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக பதிவு எண்ணுடன் வந்த 2 பைக்குகளில் 4 இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், கிருஷ்ணகிரியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 18 பேரிடம் போலீசார் ரூ.70 ஆயிரம் அபராதம் வசூலித்திருந்தனர். இந்த சூழலில், தற்போது வீலிங் செய்த இளைஞர்களால், பிற வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.