குளித்தலை அருகே மீன்பிடித் திருவிழா தொடங்கும் முன்பே சில இளைஞர்கள் இறங்கியதால், வாக்குவாதம் ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பெரியகுளத்தில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. திருவிழா தொடங்க ஒரு மணி நேரம் இருந்தம் நிலையில், மீன் பிடிப்பதற்கு சில இளைஞர்கள் குளத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் தோகைமலை இளைஞர்கள் மீன் பிடித்த இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.