தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை வெடிக்க செய்து ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளார். சமுக வகைதளங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இளைஞரை தேடிவந்தனர். இதை அடுத்து ரீல்ஸ் வெளியிட்ட இலுப்பையூரணி காலனியைச் சேர்ந்த குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்