சென்னை மெரினா கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்த பெண் ராயப்பேட்டை முத்தையா தோட்டம் பகுதியை சௌமியா என்பதும் அவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. தேர்வு சரியாக எழுதாதது குறித்து வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் மனம் உடைந்த சௌமியா, வீட்டை விட்டு வெளியேறி, ஒளவையார் சிலை அருகே சைக்கிளை நிறுத்திவிட்டு , கடலில் குதித்து உயிரை மாய்த்தது தெரியவந்தது.