"நான் எவ்வளவோ சொன்னேன் கேட்கவில்லை.." "அந்த ஊசி காரணம்..." கதறி அழும் BodyBuilder மனைவி
சென்னையில், ஜிம் பயிற்சி மேற்கொண்டு வந்த இளைஞர், திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர், சென்னை காசிமேடு ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்த 35 வயது ராம்கி. இவர், காலடிபட்டியில் உள்ள தனியார் ஜிம்மிற்கு சென்று கட்டுக்கோப்பான உடலைப் பெறுவதாக நினைத்து, ஜிம் பயிற்சியாளரான தினேஷ் சந்திரமோகன் என்பவர் பரிந்துரைத்த ஊக்க ஊசியைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், திடீரென வயிற்றுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்கியை பரிசோதித்த மருத்துவர்கள், இது சாதாரண வயிற்று வலி இல்லை. அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறினர். இதற்காக சிகிச்சை பெற்றுவந்த ராம்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருந்துவ ஆலோசனை ஏதும் இல்லாமல், உடல் வலிமை பெறுவதற்காக ஊசி கொடுத்ததால் தான், ராம்கி உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில், காசிமேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.