தாசில்தார் கார் மீது ஏறி இளைஞர் ரீல்ஸ்.. இணையத்தில் 'தீயாய்' பரவும் வீடியோ

Update: 2025-07-01 03:31 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் வட்டாட்சியரின் அரசு வாகனத்தில் ஏறி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுரேஷ் குமாரின் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தில் ஏறி தேவநாதன் என்ற இளைஞர் சினிமா வசனத்துடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதை தொடர்ந்து, வட்டாட்சியர் சுரேஷ்குமாரின் புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளைஞரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்