JUSTIN || Ladies | Train | ரயிலில் பயணிக்கும் பெண்களே உஷார்! ஜோலார்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 சவரன் தங்க நகை திருட்டு...!
கோவையை சேர்ந்த முனிசாமி என்பவரின் மனைவி மல்லிகா (வயது 45) இவர்கள் தனது குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருப்பத்தூரில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லக்கூடிய சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வீடு திரும்பியபோது ரயில் வேலூர் மாவட்டம் காட்பாடியிலிருந்து ஜோலார்பேட்டை இடையே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் மல்லிகா அணிந்திருந்த நகைகளை பார்த்து நோட்டமிட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த 7 சவரன் தங்க நகைகளை திருடிக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் மல்லிகா புகார் கொடுத்துள்ளார் புகாரின் அடிப்படையில் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.