10வது முறை கர்ப்பமான பெண் - மலை ஏறி வீட்டுக்கே சென்று அழைத்து வந்த மருத்துவர்கள்
ஓசூர் அருகே கருச்சிதைவு ஏற்பட்டும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்த மலைக்கிராம பெண்ணை, மருத்துவக் குழுவினர் தேடி சென்று சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. பெட்டமுகிலாளம் (Bettamugilalam) ஊராட்சி கடமகுட்டை (Kadamakuttai) மலைக்கிராமத்தில் மல்லி என்ற 40 வயது பெண், 10 வது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக தெரியவருகிறது. அந்த பகுதியில் மருத்துவ முகாமிட்ட மருத்துவர்கள், இதுகுறித்து தகவல் அறிந்து சுமார் 2 மணி நேரமாக அப்பெண்ணை சிகிச்சைக்காக அழைத்தும், அவர் வராமல் பிடிவாதம் செய்தார். பின்பு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர், கடமகுட்டை மலை கிராமத்திற்கு மலையேறி சென்று அப்பெண்ணிடம் பேசி, அவரை ஆம்புலன்ஸில் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தற்போது, அப்பெண் சிகிச்சையில் உள்ளார்.