ஸ்ரீ அய்யனார் கோவில் தேரோட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்
பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் மற்றும் ஸ்ரீ கல்லனை எமாபுரி கோயில் தேரோட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சிவசங்கர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், அய்யனார் அருள் பெற்றுச் சென்றனர். மேலும் அமைச்சர் வருகையை ஒட்டி, 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.