நாளை பஸ் ஓடுமா? - வந்த முக்கிய உத்தரவு
அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் எதிரொலியாக புதன்கிழமை தமிழக முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. அதன்படி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு உட்பட 13 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பேருந்து சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அனைவரும் கட்டாயம் பணிக்கு வர போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.மேலும் செவ்வாய்கிழமை பணிக்கு வந்தவர்களுக்கு புதன்கிழமை விடுப்பு வழங்கப்படாது எனவும் , அதற்கு பதிலாக வியாழக்கிழமை விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.