தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் காட்டுப்பன்றி ஒன்று தவறி விழுந்து தத்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அங்குமிங்கும் அலைந்த அந்த காட்டுப்பன்றி தண்ணீர் வழிந்து ஓடும் பாறைகளுக்கு இடையே தடுமாறி ஏறிசென்றது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் காட்டுப்பன்றியை அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு விரட்டி விட்டனர் .