மதுரை எய்ம்ஸ் முதல்கட்ட பணிகள் இந்த ஆண்டு டிசம்பருக்குள் நிறைவு பெறும் என எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் ஹனுமந்த ராவ் தெரிவித்துள்ளார். மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகளை, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நேரில் ஆய்வு செய்தார். மேலும், அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட கட்டிட பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரியில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் ஹனுமந்த ராவ், டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி தொடகத்தில், எய்ம்ஸ் தற்காலிக வளாகம் செயல்படும் என தெரிவித்துள்ளார்.