Wedding | India | German | தஞ்சை மருமகளான ஜெர்மன் பெண்.. ஊர் மெச்ச உற்சாக கல்யாணம்

Update: 2025-11-03 09:53 GMT

தஞ்சாவூரை சேர்ந்த இளைஞருக்கும், ஜெர்மன் நாட்டு பெண்ணுக்கும் இந்துமுறைப்படி திருமணம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கூனம்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். ஜெர்மனியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவரும், உடன் பணிபுரியும் ஜெர்மனை சேர்ந்த விழினா பெர்கனும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் இந்து முறைப்படி இன்று திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து மணமக்களுக்கு உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்