"தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் | Weather Report
தமிழகத்தில், வரும் நாட்களில் இயல்பைவிட வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடும் என கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடனும் காலை வேளையில் லேசான பனிமூட்டத்துடனும் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.