``ஒரு பொண்ணு தான் வச்சிருக்கோம்.. இப்படி நடந்துருச்சே’’ இரவு முழுக்க கதறிய குடும்பம்

Update: 2025-06-25 10:36 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சாலை பணியாளர் வீட்டில் 15 சவரன் தங்கநகைகள், மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்ன ஏழாச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவர் சாலை பணியாளர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் செல்வன் இரவு தனது மனைவி மற்றும் குடும்பத்ததினருடன் வீட்டின் வெளியே தூங்கியுள்ளார்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 3 பேர் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த பொருட்களை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து செல்வன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்