இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தானில் உள்ள வங்கிகளில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில் பணத்தை திரும்ப பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் முன்பு அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
State Bank of Pakistan வங்கியும் பொதுமக்களின் டெபாசிட்களுக்கான வட்டியை வெகுவாக குறைத்துள்ள நிலையில், நாளொன்றுக்கு ஒரு வங்கி கணக்கில் இருந்து ஒருவர் அதிகபட்சமாக பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு படி ஐயாயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என பாகிஸ்தான் அரசு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது. செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் பணம் எடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.