`அங்கிள்’ என்று பேசிய விஜய் - நடிகர் சூரி சொன்ன பளீச் பதில்

Update: 2025-08-27 12:14 GMT

TVK Vijay | Soori | CM Stalin | `அங்கிள்’ என்று பேசிய விஜய் - நடிகர் சூரி சொன்ன பளீச் பதில்

"அரசியலை தாண்டி அனைவரையும் மதிக்க வேண்டும்"

த.வெ.க தலைவர் விஜய் மதுரை மாநாட்டில், தமிழக முதலமைச்சரை விமர்சனம் செய்திருந்தது குறித்த கேள்விக்கு, அரசியலை தாண்டி அனைவரையும் மதிக்க வேண்டும் என நடிகர் சூரி கருத்து தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்த அவர், விஜய் அரசியலுக்கு சென்றிருந்தாலும், அனைவருக்கும் பிடித்தமான நபர் என்றும், அவர் மீண்டும் சினிமாவுக்கு வரலாம், இது அவருடைய விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய மண்டாடி படத்தின் சூட்டிங் தொடங்கிவிட்டதாகவும், மீனவர்கள் வாழ்வியலை சொல்லும் படம் என்றும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்