ஹெல்மெட் அணியாமல் போன் பேசி கொண்டே பைக்கில் செல்லும் மதுரை காவலரின் வீடியோ வைரல்
மதுரை மாநகரின் பிரதான போக்குவரத்து நெரிசல் உள்ள சாலையில் அலட்சியமாக தலை கவசம் அணியாமல், செல்போன் பேசியவாறு இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்லும் காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.மதுரை தல்லாகுளத்தில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி செல்லும் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலை விதிகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் காவலரின் இந்த செயல் பொதுமக்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.