Vellore | தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு - வேலூரில் துயர சம்பவம்

Update: 2025-09-09 16:42 GMT

குடியாத்தம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காத்தாடிக்குப்பம் பகுதியில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாதேஷ், அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள், சிறுவனை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுவனின் உடல் பிரேத பரிசோதைக்காக அனுப்பப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்