Vellore | கல் குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே சலசலப்பு

Update: 2026-01-23 06:15 GMT

கல் குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்- சலசலப்பு

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே கல்குவாரி திறப்பதற்கான கருத்து கேட்புக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.. கரடிகுடி கிராமத்தில் 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள கல் குவாரிகளை திறப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில், குவாரி வேண்டாம் என ஒரு தரப்பும், குவாரி வேண்டும் என மற்றொரு தரப்பும் வாக்குவாதம் செய்தனர். போலீசார் அறிவுறுத்தியும், அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் அதிகாரிகள் பாதியிலேயே எழுந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்