வேளாங்கண்ணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி செப்டம்பர் 8 ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில், மாதா திருவுருவம் பொரித்த கொடி ஊர்வலமாக எடுத்து வந்து கொடிக்கு புனிதம் செய்தபின் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை காண 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளதாகவும், யாத்தீர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பேரூந்துகள் , தங்கும் விடுதிகள், மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பேராலய அதிபர் இருதயராஜ் தெரிவித்துள்ளார். திருவிழாவிற்காக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.