சேலம் மாவட்டம் மேட்டூரில், வசந்த் அண்ட் கோவின் 137வது கிளையை, வசந்த் குமார் மகள் தமிழ் மலர் ஜெகநாத் திறந்து வைத்தார். தொடர்ந்து குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்த அவர், கடையில் வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோக பொருட்களையும் பார்வையிட்டார். திறப்பு விழா மற்றும் தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்குபவர்களுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.