திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 250க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட வள்ளிக் கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. உடுமலை அய்யம்பாளையம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் கலைக்குழுவினர், கோவில் வளாகத்தில் கூடி, வள்ளிக் கும்மி நடனத்தில் பங்கேற்றனர். இதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஒரே சீருடை அணிந்து, தாளத்திற்கு ஏற்ப நடனமாடி பக்தர்களை பரவசம் அடையச் செய்தனர்.