வறண்டு கிடந்த வைகை ஆற்றில் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீர்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
தேனி மாவட்டம் வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வைகை ஆற்றில் மிதமான அளவில் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக போதுமான மழை இல்லாததால், வைகை ஆறு வறண்டு மணல்மேடாக காட்சியளித்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மழை பெய்து நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளதால் குடிநீர் பற்றாக்குறை நீங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் கோடை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.