குரூரத்தில் உச்சம்- அப்பாவி மருமகளுக்கு AIDS ஊசி போட்ட சைக்கோ மாமியார்... கேட்கவே நடுங்கும் சித்ரவதை

Update: 2025-02-16 14:49 GMT

உத்தரபிரதேச மாநிலம் ஷகாரன்பூரை சேர்ந்த சோனலுக்கும், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரை சேர்ந்த அபிஷேக்கிற்கும் 2023 பிப்ரவரியில் திருமணம் நடந்துள்ளது. அப்போது வரதட்சணையாக ஒரு கார், 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை சோனலின் தந்தை கொடுத்துள்ளார். அது போதாது, ஸ்கார்பியோ கார் வேண்டும், கூடுதலாக 25 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று சோனலை அவரது மாமியார், வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது ஊர் பெரியவர்கள் பேசி சோனலை கணவரோடு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல சோனல் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வரதட்சணை கிடைக்காத ஆத்திரத்தில் சோனலுக்கு அவரது மாமியாரே எய்ட்ஸ் கிருமியை ஊசி மூலம் செலுத்திவிட்டார் என்று சோனலின் தந்தை ஷகாரன்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாமியார் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்