"அரசு வேலை வாங்கி தரேன்" - ஆசையாக பேசி மக்களுக்கு அல்வா கொடுத்த 2 பெண்கள்

Update: 2025-05-20 03:01 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களிடம் செல்போன் மூலம் பேசி பணம் வசூலித்த அங்கன்வாடி பெண் அமைப்பாளர் மற்றும் மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கான காலி பணியிடங்களைப் பற்றி அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கு விண்ணப்பித்தவர்களை குறிவைத்து இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இதனால், அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் முகவரி எப்படிக் கிடைத்தது? அதிகாரிகள் இதற்கு உடந்தையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆகாயம் பகுதியைச் சேர்ந்த அப்துல் பாசித் என்பவரிடம், ராமவதி மற்றும் ஜம்ஷிகா என்பவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் வீட்டிற்கு வந்தபோது, அவர்களைப் பிடித்து அப்துல் பாசித் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்