நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் சோகம்
நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தின் மீது சென்ற அரசு பேருந்து மீது அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த லோகேஷ், சந்தோஷ், சாதிக் என்ற மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.