`அண்ணா அண்ணா' என கத்தி காரை நிறுத்தி சிறுமி கொடுத்த Gift - யோசிக்காமல் விஜய் செய்த செயல்
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் காரை நிறுத்தி, ரசிகர் ஒருவர் அவருக்கு பரிசு கொடுத்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. அரசியல், சினிமா என இரண்டிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார் விஜய்... இந்நிலையில், விஜய்யின் ரசிகர்களான சிறுவர்களும், இளைஞர் ஒருவரும் சேர்ந்து, அவரின் காரை வழிமறித்து கோல்ட் பென்னை பரிசாக அளித்தனர். அவர்களை கண்ட விஜய், காரை நிறுத்தி அந்த பரிசை ஏற்றுக்கொண்டார். ஓய்வெடுக்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தாலும், ரசிகர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க கூடிய வகையிலான அவரது செயல், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.