TVK | School | தவெகவினர் போட்ட ரீல்ஸ்... விபரீதமான விவகாரம்... HMக்கு வந்த ஷாக் நியூஸ்
கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை அப்பகுதி இளைஞர்கள் தவெக சார்பில் சுத்தம் செய்த நிலையில், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் தென்னிலையில் செயல்பட்டுவரும் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை, தலைமை ஆசிரியை அனுமதி பெற்று, இளைஞர்கள் சிலர் சுத்தம் செய்து கொடுத்துள்ளனர். இதனை வீடியோவாக பதிவிட்ட இளைஞர்கள், தவெக சார்பில் பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டாதாக குறிப்பிட்டு ரீல்ஸ் வெளியிட்ட நிலையில், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை சுஜாதா ஷியாமளா குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.