மதுரையில் த.வெ.க பொதுக்கூட்டம்..விஜய் பாடல்களுக்கு உற்சாக நடனமாடிய மாற்றுத்திறனாளிகள்
மதுரை மாவட்டம்,தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் த.வெ.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லானை மற்றும் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஷேக் முகமது உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் மாற்று திறனாளிகள் பலர் கலந்து கொண்ட நிலையில், விஜய் பட பாடல்களுக்கு உற்சாக நடனமாடினர். மேலும், பல மாற்றுத்திறனாளிகள் தங்களை த.வெ.கவில் இணைத்துக் கொண்டனர்.