திருச்சியை உலுக்கிய அலறல்... பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டிப் படுகொலை... கடைசி நிமிட காட்சிகள்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரவுடி திலீப் கூட்டாளியான ரவுடி அன்பு, ஜிம்முக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியபோது 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, அன்பு உயிருக்கு போராடிய கடைசி நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளன.