ஒப்பாரி வைத்து தர்ணாவில் குதித்த திருநங்கைகள் - திடீர் பரபரப்பு

Update: 2025-07-28 15:05 GMT

ஒப்பாரி வைத்து தர்ணாவில் குதித்த திருநங்கைகள் - திடீர் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்க கோரி திருநங்கைகள் ஒப்பாரி வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள பட்டாவையும் இலவச வீட்டுமனை பட்டாவையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒப்பாரி வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் பிரதாப் திருநங்கைகளை பேச்சு வார்த்தை அழைத்த நிலையில் அதனையும் புறக்கணித்து விட்டு

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்