மாடு பிடிக்கச் சென்ற சிறுவனுக்கு நொடியில் நேர்ந்த சோகம் - காத்துக்கிடந்து கதறிய தாய்
மாட்டை பிடிக்க சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் மின்னல் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் சின்வீர். இவரது மகன் வினோத்குமார், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வயலில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை பிடித்து வரச் சென்ற வினோத்குமார், செல்போன் பயன்படுத்தியபடியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி, சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.