தீயை அணைக்க சென்ற, தீயணைப்பு வாகனம் விபத்து
தஞ்சாவூர் மாவட்டம் நத்தம் கிராமத்தில் தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வாகனம் சாலை சரியில்லாமல் விபத்துக்குள்ளாகி, வயலில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த கிராமத்திற்கு சாலை அமைக்காத நிலையில், அவ்வப்போது இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.