கிரிக்கெட் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கோரம் - தொட்டவுடன் உயிரை பறித்த எமன்
கிரிக்கெட் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கோரம் - தொட்டவுடன் உயிரை பறித்த எமன்
கிரிக்கெட் பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பந்தை எடுக்கச் சென்ற 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
ஃபஹத் என்ற 8 வயது சிறுவன், தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகே இருந்த மின்மாற்றிக்கு பக்கத்தில் பந்து சென்று விழுந்துள்ளது. அப்போது அங்கிருந்த மின்மாற்றியை தொட்ட சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து சிறுவனை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மின்மாற்றிக்கு பக்கத்தில் உள்ள கதவு சேதமடைந்த நிலையில், அதுகுறித்து புகார் தெரிவித்தும் மின்வாரிய நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், இதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.