டார்ச்சர் செய்த கணவன்.. பிளான் போட்டு தீர்த்து கட்டிய மனைவி - பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்
திருவாரூரில் சந்தேகப்பட்டு கொடுமை செய்து வந்த கணவரை, மின்வயரால் கழுத்தை நெரித்து மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் அருகே உமா மகேஸ்வரபுரத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான, ஆனந்த பத்மநாதன் என்பவர், சமீபத்தில் பூதமங்கலச்சேரி கால்வாய் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்த போலீஸ் விசாரணையில், இவர் மதுபோதையில் சம்பவ இடத்தில் அமர்ந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இவரது மனைவி சவிதா, கீழே கிடந்த மின்வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்ததை போலீசில் ஒப்புக்கொண்டார். இதில், தனது நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் செய்த கொடுமையால் அடைந்த விரக்தியில் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.