லிப்ட் கேட்ட சிறுவனுக்கு நடந்த சித்திரவதை - கதறி துடிக்கும் தாய்..

Update: 2025-07-12 05:15 GMT

பள்ளி மாணவனை மது அருந்தச் சொல்லி இளைஞர்கள் கொடூர தாக்குதல்

திருப்பூரில், இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச் சென்ற 15 வயது பள்ளி மாணவனை மது அருந்தச் சொல்லி இளைஞர்கள் கடுமையாக தாக்கியதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சிபட்டி பகுதியை சேர்ந்த தம்பதியரின் மூத்த மகன், திருப்பூர் சொக்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வகுப்பை கட் அடித்துவிட்டு பள்ளிக்கு அருகே, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களிடம் சாமளாபுரத்தில் தன்னை இறக்கிவிடுமாறு லிப்ட் கேட்டுள்ளார். சிறுவனை

இருசக்கர வாகனத்தில் ஏற்றிய இளைஞர்கள், சூலூர் அருகே மதுபான கடைக்கு அழைத்து சென்று குடிக்கச் சொல்லி இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்