Latest Tamilnadu News | தமிழகத்தில் `நாளையே’ கடைசி - மக்களே மிஸ் பண்ணிடாதீங்க.. வேதனைப்படுவீங்க
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. எஸ்.ஐ.ஆர். என்கிற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 18-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த கால அவகாசம் ஜனவரி 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நாளையுடன் நிறைவுபெறுகிறது. தற்போது வரை 18 வயது பூர்த்தியடைந்த 16 லட்சத்து 2 ஆயிரத்து 555 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கக் கோரி, 1 லட்சத்து 3 ஆயிரத்து 115 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுமார் 66 லட்சம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என்று வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதில் 16 லட்சத்து 2 ஆயிரத்து 555 பேர் மட்டுமே பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதன்படி பார்த்தால் சுமார் 50 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை. ஜனவரி 30-ஆம் தேதிக்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.