Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.01.2026) | 6 AM Headlines | ThanthiTV
- பிரதமர் மோடியின் மதுரை நிகழ்ச்சி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது... வரும் 23-ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, கூட்டணி தலைவர்களுடன் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்...
- கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகளிடம் ஆஜரான விஜய்யிடன் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்... சிபிஐயின் கேள்விகளுக்கு விஜய் அளித்த பதில்கள் ஆவணப்படுத்தப்பட்டு அவரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது...
- கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் விஜய் ஆஜராக சிபிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... மீண்டும் பொங்கல் பண்டிகைக்குபின் விஜயை விசாரணைக்கு மீண்டும் அழைக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..
- தமிழகத்தில், பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது... வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், புதன் கிழமை முதல் ஞாயிறு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது...
- புதுச்சேரி - 100 அடி சாலை மேம்பாலம் அருகே ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது... தீ பிடித்ததை அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநர் எச்சரித்தால் பேருந்தில் பயணித்த 13 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்...
- கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விஜய்யிடம் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. நிகழ்ச்சி நடந்த இடத்திற்குச் செல்ல பல மணி நேர தாமதம் ஏன்? உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது...