Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.01.2026) | 6 AM Headlines | ThanthiTV
- கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் தவெக தலைவர் விஜய் டெல்லியில் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார்... சென்னையில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் தனி விமானம் மூலம் விஜய், டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்...
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.... புவி கண்காணிப்புக்கான இ.ஓ.எஸ். - எண் 1 உட்பட 16 செயற்கைகள்களை விண்ணில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது...
- பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்ததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.... நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன...
- கூட்டணி குறித்து இதுவரை தம்மிடம் எந்த கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்... தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக ஊடகப் பேரவை கூட்டத்தில் பேசிய அவர், தாம் நினைத்த அளவுக்கு அந்த அமைப்பு செயல்படவில்லை என்று கவலையை வெளிப்படுத்தினார்...
- பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் புதுமணத் தம்பதி உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.... பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது....