Pongal | Chennai | பொங்கலுக்கு லட்சக்கணக்கில் ஊருக்கு படையெடுத்த மக்கள் - வெளியான புள்ளிவிவரம்
பொங்கல் சிறப்பு பேருந்துகளில் கடந்த 3 நாட்களில் 3.58 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். போக்குவரத்துத் துறையின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களில் மொத்தம் 8,270 பேருந்துகள் இயக்கப்பட்டு, 3,58,496 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இதுவரை 2,38,535 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.