Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச்செய்திகள் (22.09.2025) 1 PM Headlines | ThanthiTV

Update: 2025-09-22 08:28 GMT
  • நாடு முழுவதும் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் அமலுக்கு வந்த‌து...12, 28 சதவீத வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு நடைமுறைக்கு வந்த‌து...
  • ஜிஎஸ்டி குறைப்பு அமல் ஆன நிலையில், பழைய MRP-ல் பொருட்கள் விற்பனை செய்யக்கூடும் என தேசிய நுகர்வோர் உதவி மையம் எச்சரித்துள்ளது...பழைய விலையிலேயே பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், புகார் அளிக்க வழிகாட்டுதலும் வெளியிட்டுள்ளது...
  • மருத்துவ துறை சார்பில் ஆயிரத்து 156 கிராம சுகாதார செவிலியர் மற்றும் 75 துணை செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ளது...சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்...
  • திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது... கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதோடு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது...
  • சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால், ஒரே நாளில் தக்காளி விலை 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது... கர்நாடகா, ஆந்திராவில் பெய்துவரும் மழையால், வரத்து குறைந்து விலை உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்