Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.10.2025) | 1PM Headlines | ThanthiTV
- சர்வதேச அளவில் பெரு நிறுவனங்கள், செல்வந்தர்களுக்கு டாலர் மீது அச்சம் ஏற்பட்டுள்ளதால் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்... விலை உயர்வுக்கும், தங்கம் பற்றாக்குறைக்கும் இதுவே முக்கிய காரணம் என, தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்...
- பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார்... தனி விமானம் மூலம் மும்பையில் தரையிறங்கிய நிலையில், மகாராஷ்டிர ஆளுநர், முதல்வர், துணை முதல்வர்கள் வரவேற்றனர்...
- காசா இனப்படுகொலையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இஸ்ரேலுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது...
- கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதற்கு, விஜய் கரூர் செல்ல பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது... தவெக வழக்கறிஞர் அறிவழகன் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்...
- கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதற்கு, விஜய் கரூர் செல்ல பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது... தவெக வழக்கறிஞர் அறிவழகன் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்...
- கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் யாரையும் பழி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்... எடுத்தேன், கவிழ்த்தேன் என கரூர் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்...
- நடிகை பாலியல் வழக்கில், மன்னிப்பு கோரி சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது... புகாரை திரும்ப பெறுவதாக நடிகை தரப்பில் கூறியதால், சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டது...