"இவனுக்கு என்ன தெரியும்னு சொன்னவங்களுக்கு எல்லாம்.." - மேடையில் பேசிய பரத்
"சின்ன வசனங்களைக் கூட சின்னத்திரை உறுப்பினர்களே பேசவேண்டும்"
சின்னத்திரை வேலைவாய்ப்பை பொருத்தவரையில், சின்ன சின்ன வசனங்கள் பேசுபவர்களாக இருந்தாலும் அது நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவரான பரத் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில், சின்னத்திரை நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதனை நடிகை அம்பிகா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அச்சங்கத்தின் தலைவரான பரத், இக்கருத்தை தெரிவித்துள்ளார்.