பூனையைக் கொன்ற இளைஞர்- தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுபோதையில் இருந்த இளைஞர், பூனையை கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த மதுபான பாரில் நண்பர்கள் மூன்று பேர் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வளர்க்கப்பட்டு வந்த பூனை, அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது, போதையில் இருந்த கண்ணன் என்பவர், அந்த பூனையை பிடித்து சுவரின் மீது வேகமாக வீசியதில், பூனை அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது. இதைத் தட்டிக்கேட்ட பார் ஊழியர் செல்லபாண்டியை, நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து தாக்கி விட்டு தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்த செல்லபாண்டியும், தடுக்க வந்து காயமடைந்த சந்திரசேகர் என்பவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, நவீன் என்பவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கண்ணன், மோகன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.