"பாஜகவின் பொருளாதாரப் போரை எதிர்கொள்ளவே ஓரணியில் தமிழ்நாடு"
தமிழ்நாட்டின் மீது மத்திய பாஜக அரசு தொடுத்துள்ள அரசியல், பொருளாதாரப் போரை எதிர்கொள்ளத்தான் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் முன்னெடுக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை திட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு மூலம் மாணவர்களின் மருத்துவக் கனவை பாஜக சிதைப்பதாகக் குற்றம்சாட்டினார். கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிட மறுத்து தமிழ்நாட்டை பாஜக தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.